Wednesday, August 19, 2009

சென்னை தியேட்டர்களில் “கந்தசாமி” படம் வசூல் சாதனை; ஒரே நாளில் ரூ.95 லட்சத்துக்கு டிக்கெட் விற்பனை - Kandaswamy Going to be record in Cine field

விக்ரம், ஸ்ரேயா ஜோடியாக நடித்த “கந்தசாமி” படம் நாளை மறுநாள் (21-ந்தேதி) ரிலீசாகிறது.

சென்னையில் அபிராமி, ஸ்வர்ண சக்தி அபிராமி, பால அபிராமி, சத்யம், சாந்தம், சாந்தி, சாய் சாந்தி, ஆல்பர்ட், பேபி ஆல்பர்ட், மெலோடி, ஐநாக்ஸ், ஐநாக்ஸ்-2, சங்கம், உதயம், சூரியன், கமலா, ஐடிரீம்ஸ், மகாராணி ஆகிய 18 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. உலகம் முழுவதும் 900 தியேட்டர்களில் வெளிவர உள்ளது.

டிக்கெட் முன்பதிவு நடந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மட்டும் சென்னையில் உள்ள தியேட்டர்களில் ஒரே நாளில் 95 லட்சத்து 22 ஆயிரத்து 498 ரூபாய் வசூல் ஆகியுள்ளது. 1 லட்சத்து 46 ஆயிரத்து 976 டிக்கெட்டுகள் முன்பதிவு மூலம் இத்தொகை கிடைத்துள்ளது.

இது பெரிய சாதனையாகும் என்று சென்னை திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவரும் கந்தசாமி விநியோகஸ்தருமான அபிராமி ராமநாதன் தெரிவித்தார். “கந்தசாமி” படம் ஒரே நாளில் இவ்வளவு தொகை வசூலித்து இருப்பதை பார்க்கும்போது இந்த படம் ஒரு பிரமாண்டம் என்று மக்கள் ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை என்றும் அவர் கூறினார்.

Read More...

ராக்கி சாவந்தை போல் சுயம்வரம்; நடிகை சோனா டி.வி.யில் மாப்பிள்ளை தேடுகிறார்-Interested to marry Sona search panuranga marriage ku alaa patuu ponga!!!!

கவர்ச்சி நடிகை சோனா டெலிவிஷனில் சுயம்வரம் நடத்தி மாப்பிள்ளையை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளார். இவர் பத்து பத்து, குலேசன், அழகர் மலை போன்ற படங்களில் நடித்தவர். தற்போது வீரசோழன் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஒரு பாட்டுக்கு குத்தாட்டமும் ஆடியுள்ளார்.

இந்தி நடிகை ராக்கி சாவந்த் சமீபத்தில் டெலிவிஷனில் சுயம்வரம் நடத்தி மாப்பிள்ளையை தேர்வு செய்தார். ஏராளமானோர் போட்டி போட்டு அவரை திருமணம் செய்ய விண்ணப்பித்தனர். இறுதி சுற்றில் இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியரை மாப்பிள்ளையாக தேர்வு செய்தார். அது போல் சோனாவும் மாப்பிள்ளை தேட முடிவு செய்துள்ளார். இது பற்றி சோனாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
ராக்கி சாவத்தை போல் எனக்கு மாப்பிள்ளை பார்க்கும் சுயம்வர நிகழ்ச்சி ஒன்றை நடத்த தமிழ் டி.வி.சேனல் ஒன்று என்னை அணுகியது. அது பற்றி நான் யோசித்து கொண்டு இருக்கிறேன். அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தாலும் நடக்கலாம் என்றார்.

Read More...

டெஸ்ட் கிரிக்கெட்டை பார்க்க பள்ளிச் சிறுவர்களுக்கு இலவச அனுமதி அளிக்கவேண்டும்-சச்சின்

டெஸ்ட் கிரிக்கெட்டை அழியாமல் தடுக்க, இளைய சமுயாதத்தினருக்கு டெஸ்ட் கிரிக்கெட் மீது ஈர்ப்பு ஏற்பட டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் போது பள்ளிச் சிறுவர்களுக்கு இலவச அனுமதி அளிக்கவேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

மும்பையில் நடைபெற்ற புத்தக அறிமுகக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சச்சின் டெண்டுல்கர், "நான் 5 வயதில் கிரிக்கெட் விளையாடத் துவங்கினேன், 10-வது வயதில் மைதானத்திற்குச் சென்று டெஸ்ட் கிரிக்கெட் பார்த்தேன், மேற்கிந்திய தீவுகளுடன் இந்தியா விளையாடியது.

அது என் நினைவில் இன்றும் பசுமையாக உள்ளது. எந்த ஒருவரும் சிறுபிராயத்தில் ஏற்படும் இந்த அனுபவங்களை மறக்க முடியாது. நாம் எவ்வளவுக்கெவ்வளவு குழந்தைகளை வரவேற்கிறோமோ அந்த அளவிற்கு அந்த விளையாட்டும் வளர்ச்சியடையும்". என்றார் சச்சின்.

ஒவ்வொரு டெஸ்ட் போட்டியின் போதும் வார இறுதியில் சிற்வர்களுக்கென்று ஸ்டேடியத்தில் ஒரு பகுதியை நாம் காலியாக வைத்திருப்பது அவசியம் என்று வலியுறுத்தியிஅ சச்சின் டெண்டுல்கர் அவர்களில் 10% கிரிக்கெட் ரசிகர்களானாலே கிரிக்கெட் ஆட்டத்திற்கு அது ஒரு பெரிய உற்சாகத்தை அளிக்கும் என்று கூறினார்.

Read More...

பொக்கிஷம் காட்சிகள் குறைப்பு - Pokkisham Cheran Edited Again

அளவுக்கு மீறினால் அமிர்தம் கூட நஞ்சு. அமிர்தத்துக்கு பொருந்துகிற பொன் மொழி ஃபிலிமுக்கும் பொருந்தும். இரண்டு மணி நேரம் தாண்டினாலே திரையரங்கிலிருந்து ஓடுகிறார்கள் ரசிகர்கள். பொக்கிஷத்தின் ரன்னிங் டைமோ ஏறக்குறைய மூன்று மணி நேரம்.

பொக்கிஷத்தின் சில குறைகளில் முக்கியமானது அதன் நீளம். எடிட்டிங்கில் கை வைக்க சேரனுக்கு மனமில்லை. படம் வெளிவந்த பிறகு நண்பர்கள் சொன்னதற்கு செவிசாய்த்து, படத்தின் நீளத்தை குறைக்க முடிவு செய்திருக்கிறார். தேவையில்லாத ஒரு பாடல் காட்சி உள்பட மொத்தம் 22 நிமிடங்கள் படத்தில் எடிட் செய்யப்பட்டுள்ளது.

நண்பர்கள், ரசிகர்கள், திரையரங்கு உ‌ரிமையாளர்கள் ஆகியோ‌ரின் கருத்துக்கு மதிப்பளித்து, படம் வெளியாகி நான்கு நாட்களுக்குப் பிறகு இந்த முடிவை எடுத்திருக்கிறார் சேரன். லேட்டுதான் ஆனாலும் ஸ்வீட்டான முடிவு.

Read More...

Monday, August 17, 2009

ஐஸ்வர்யாராயை கண்டால் உதறுது...! -விக்ரம்- Scare about Iswarya rai ---Vikram

கந்தசாமிக்காக உழைத்துவிட்டு அடுத்ததாக ராவணா உழைப்பை பற்றி சிலாகிக்க ஆரம்பித்துவிட்டார் விக்ரம். ஒவ்வொரு காட்சியும் வழக்கமான ஒன்றாக இல்லாம இருக்கணும். இதுதான் மணிரத்னம் ஸ்டைல். ஒரு கேரக்டர் புடிச்சதுன்னா அதுக்குள்ளே புகுந்து போய் உட்கார்ந்துக்கறது என்னோட பாணி. வெறித்தனமா உழைக்கிற ரெண்டு பேரு சேர்ந்தா எப்படியிருக்கும்? படம் வந்ததும் பாருங்க, மைண்ட் புளோயிங் என்கிறார் விக்ரம்.

மணி சார் ஈடுபாட்டை அவ்வளவு சுலபமா சொல்லிவிட முடியாது. திடீர்னு பொங்கிக்கிட்டு வர்ற தண்ணீருக்கு நடுவிலே நிக்க சொல்லிடுவாரு. நாம தத்தளிச்சாலும், தவிச்சாலும் அது பற்றி இரக்கமே பட மாட்டாரு. நான் சொல்றபடி செய். இதுதான் அவரோட ஒரே வார்த்தையா இருக்கும். நம்ம பயத்திலே முழிச்சா கூட, இந்த இடத்திலே அப்படி முழிக்க கூடாது. இப்படி முழிக்கணும்ன்னு சொல்ற ஆள் அவர். எடுக்க நினைச்சது வர்ற வரைக்கும் விடவே மாட்டார்.

இந்த படத்திலே எனக்கு கிடைச்ச அருமையான இன்னொன்னு அபிஷேக் பச்சனோட பிரண்ட்ஷிப். என்னோட ஷாட் எடுத்திட்டு இருந்தா கூட நின்னு கவனிப்பார். பாறை மேலே ஏற சொல்லுவாரு மணி சார். பக்கத்திலேயே நின்னுகிட்டு, கவனமா ஏறுங்க. அங்கே போகாதீங்க. வழுக்கும்னு சொல்லி கொடுப்பார் அபிஷேக். ரொம்ப கலகலப்பான நபர். அவரு செட்டுக்குள்ளே வந்திட்டா அந்த இடமே ரொம்ப சந்தோஷமா மாறிடும் என்றார் விக்ரம்.

அபிஷேக் கூட இவ்வளவு நெருக்கமா பழகினாலும், ஐஸ்வர்யா ராய் பக்கத்திலே வந்தா உதறுதுங்க என்ற விக்ரமின் வார்த்தைகளை நம்பதான் வேண்டியிருக்கு. வேறென்ன செய்வது?



Read More...

ஹோட்டலை திறந்து வைத்த சூர்யா-ஜோதிகா

சென்னை அடையாறு காந்தி நகரில் முழுக்க முழுக்க தென்னிந்திய பாணியிலான சைவ-அசைவ ஹோட்டல் ஒன்றை சுரேஷ் மேனன் துவங்கியுள்ளார். ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களைத் தயாரித்தவர் சுரேஷ் மேனன். இவரது மனைவி ரேவதி நடித்த புதிய முகம் படத்தைத் தயாரித்து, இயக்கி நாயகனாகவும் நடித்தார். பின்னர் பாச மலர்கள் படத்தைத் தயாரித்து இயக்கினார். இவற்றைத் தவிர ரேவதி இயக்கிய மித்ர- மை பிரண்ட், உள்ளிட்ட இந்திப் படங்களின் நிர்வாகத் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். பின்பு இருவரும் விவகாரத்து பெற்றுவிட்டனர். இப்போது தனது ரசனைக்கேற்ப வித்தியாசமான ஹோட்டல் ஒன்றைத் துவங்கியுள்ளார். எப்போதும் சத்தத்துடன் கொட்டும் அருவி, விட்டும் விடாத மாதிரி மழை பெய்யும் கேரளத்துச் சூழலுடன் இந்த உணவகத்தை அவர் டிசைன் செய்துள்ளார். இங்கு பரிமாறப்படும் உணவுகளும் வித்தியாசமானவையே. நம் கிராமங்களில் மெல்ல மெல்ல வழக்கொழிந்து வரும் பானகம், சுக்குத் தண்ணி போன்றவைதான் இங்கு வரவேற்பு பானங்கள்.
இங்கு சமையலுக்குப் பொறுப்பு பிரபல செப் ஜேக்கப். செல்லப் பிராணிகளோடு வருபவர்கள், அவற்றை எங்கே விடுவது என்று தடுமாறாமல் இருக்க அவற்றுக்கு தனி இடமும் ஒதுக்கியிருக்கிறார்கள். விரைவில் குழந்தைகளுக்கென்று தனிவிளையாட்டுப் பகுதியையும் ஆரம்பிக்கிறாராம். இங்கு குழந்தைகள் தவறி கீழே விழுந்தாலும் அடிபடாத மாதிரி தரை அமைக்கப்படுமாம். கிரிம்ஸன் சக்ரா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஹோட்டலை நடிகர் சூர்யாவும் அவர் மனைவி நடிகை ஜோதிகாவும் சமீபத்தில் திறந்து வைத்தனர். இதனுடன் இணைந்த சிற்றுண்டி உணவகத்துக்கு 13 பர்ஸ்ட் கிரெஸன்ட் எனப் பெயர் வைத்துள்ளார் சுரேஷ் மேனன். ஹோட்டலின் சிறப்புகளைக் கேட்டபடி, சில உணவுகளைச் சுவைத்துப் பார்த்த சூர்யாவும் ஜோதிகாவும், மனம் திறந்து பாராட்டினர் சுரேஷ் மேனனை. சென்னை நகரில் இந்த மாதிரி உணவகம் அரிது என்றார் சூர்யா. இயக்குநர்கள் ராஜ“வ் மேனன் உள்ளிட்ட ஏராளமான திரையுலகப் பிரபலங்கள் இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Read More...

படங்கள் குவிவதால் சம்பளத்தை உயர்த்தி விட்டேன் -பிரியாமணி - Priyamani increased the salary in movies

“பருத்தி வீரன்” படம் மூலம் தேசிய விருது நடிகையான பிரியாமணி மணிரத்னம் இயக்கும் “ராவணன்” படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதில் சூர்ப்பனகை வேடத்தில் அவர் நடிப்பதாக தகவல் வெளியானது. அதை மறுத்தார். சூர்ப்பனகை கேரக்டரில் நடிக்கவில்லை என்று கூறினார். மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் நெடுநாள் கனவு அது இப்போது நிறைவேறி இருக்கிறது. அழுத்தமான கேரக்டரில் நடிக்கிறேன் என்றும் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:-

நிறைய கஷ்டங்களையும் போரட்டங்களையும் சந்தித்துதான் இந்த அளவுக்கு உயர்ந்து இருக்கிறேன். நீச்சல் உடையில் நடித்தது பற்றி பலவிதமாக பேசுகிறார் கள். தெலுங்கு “துரோணா” படத்தில் கதைக்கு தேவை என்பதால் அப்படி நடித்தேன்.

நயன்தாரா பில்லா படத்தில் பிகினி உடையில் நடித்துள்ளார். மேலும் நீச்சல் உடையில் நடிப்பது போன்ற படங்கள் எதுவும் எனக்கு வரவில்லை.

சம்பளத்தை நான் உயர்த்தி விட்டதாகவும் பேசுகிறார்கள். அதில் என்ன தவறு இருக்கிறது. நான் 3 ஹிட் படங்களில் நடித்து இருக்கிறேன். எனவே அதற்கு தகுந்தபடி சம்பளத்தை பெறுகிறேன். நடிகைகளில் யார் சம்பளத்தை கூட்டவில்லை என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

ஓரிரு படங்கள் வெற்றிகரமாக ஓடினால் எல்லோருமே சம்பளத்தை ஏற்றி விடுகிறார்கள். நானும் அந்த வகையில் என் சம்பளத்தை உயர்த்தி இருக்கிறேன். எனக்கு சினிமாவில் இப்போது என்ன மார்க்கெட் இருக்கிறதோ அதற்கு தகுந்த சம்பளத்தை நிர்ணயித்து உள்ளேன்.

Read More...

ஆதவன் ஆடியோ விழாவில் ஷங்கர் - Aadhavan Audio Release

ஆதவன் ஆடியோ வெளியீட்டு விழா சுதந்திரத் தினத்தன்று நடப்பதாக இருந்தது. பிறகு பதினாறாம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக செய்தி வெளியானது. ஆனால், வரும் பத்தொன்பதாம் தேதிதான் விற்பனைக்கு வருகிறது ஆதவன் ஆடியோ.

பத்தொன்பதாம் தேதி மாலை ஆறு முப்பதுக்கு சென்னை சத்யம் சினிமாஸில் ஆதவன் வெளியீட்டு விழா நடக்கிறது. இயக்குனர் ஷங்கர் முதல் ஆடியோவை வெளியிட, தயா‌ரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் பெற்றுக் கொள்கிறார்.

விழாவில் படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், ஹீரோ சூர்யா, தயா‌ரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் உள்பட திரையுலக பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள். விழாவின் சிறப்பு அழைப்பாளர், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால். செப்டம்பர் மாதம் ஆதவன் திரைக்கு வருகிறது.

Read More...

கோடியில் ஒரு கிளைமாக்ஸ்

இரண்டு கோடி இருந்தால் ஒரு படத்தையே எடுத்து விடுகிறார்கள். இன்னும் சிலரோ, ஒரு காட்சிக்கு இரண்டு கோடி செலவு செய்கிறார்கள். ஆதவன் இரண்டாவது வகை.

பெ‌ரிய குடும்பம் ஒன்றின் தலைவி சரோஜாதேவி. அவருக்கு அடுக்கடுக்காக மகன்கள். அதில் இளைய மகனின் மகள், நயன்தாரா. அந்த பெ‌ரிய குடும்பத்தில் வேலை செய்யும் சூர்யா அந்த குடும்பத்தை சீர்குலைக்க முயல்கிறார். ஏன்? எதற்கு? என்பது சஸ்பென்ஸ்.

ரெட்ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயா‌ரித்திருக்கும் இந்தப் படத்தில் சூர்யாவின் அப்பாவாக மறைந்த மலையாள நடிகர் முரளி நடித்துள்ளார். வில்லனாக நடித்திருப்பவர் ராகுல்தேவ்.

படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை தென்னாப்பி‌ரிக்காவில் சமீபத்தில் எடுத்தனர். பிரமாண்டமாக எடுக்கப்பட்ட இந்த கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிக்கு மட்டும் ஏறக்குறைய இரண்டரைக் கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். கோடியில்...ஸா‌ரி, கோடிகளில் ஒரு கிளைமாக்ஸ். வெளிநாட்டு சண்டைக் கலைஞர்களும் இடம் பெற்ற இந்த சண்டைக் காட்சியை அமைத்தவர் கனல் கண்ணன்.

அடுத்த மாதம் ஆதவன் திரைக்கு வருகிறது.

Read More...

சினேகாவுக்கு டார்ச்சர் - தொழிலதிபர் கைது

திருமணம் செய்து கொள்ளும்படி நே‌ரிலும், எஸ்எம்எஸ் மூலமாகவும் சினேகாவுக்கு டார்ச்சர் கொடுத்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டார். சினேகா கொடுத்த புகா‌ரின் போpல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று முன் தினம் சென்னை மாநகர காவ‌ல்துறை ஆணைய‌ர் ரா‌ஜேந்திரனிடம் நடிகை சினேகா ஒரு புகார் அளித்தார். அதில், கடந்த ஆறு மாத காலமாக தன்னை ஒருவன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு திருமணம் செய்து கொள்ளும்படி டார்ச்சர் செய்வதாகவும், தினமும் ஐம்பதுக்கும் மேல் எஸ்எம்எஸ் அனுப்புவதாகவும், வேறு யரையாவது திருமணம் செய்தால், அவரை கொன்றுவிட்டு தன்னை விதவையாக்கிவிடுவேன் என மிரட்டல் விடுத்ததாகவும் சினேகா தெ‌ரிவித்திருந்தார்.

அந்த மர்ம நபர் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கும் நே‌ரில் வந்து சினேகாவுக்கு தொந்தரவு கொடுத்திருக்கிறான். இந்த புகாரைத் தொடர்ந்து சைபர் கிரைம் உதவி ஆணைய‌ர் சுதாகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் விசாரணையில் எஸ்எம்எஸ் அனுப்பிய நபர் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருப்பது தெ‌ரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து ஹோட்டலில் தங்கியிருந்த பெங்களூருவைச் சேர்ந்த ராகவேந்திரா என்பவரை காவ‌ல்துறை‌யினர் கைது செய்தனர். சினேகா மீதுள்ள கண்மூடித்தனமான காதலால் இவ்வாறு செய்ததாக கைது செய்யப்பட்ட நபர் தெ‌ரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ராகவேந்திரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் நீதிபதி உத்தரவுப்படி அவரை காவ‌ல்துறை‌யின‌ர் புழல் சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட ராகவேந்திரா பெங்களூருவில் ‌ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More...

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009