Monday, July 6, 2009

கத்தரிக்காய் மசாலா குழம்பு

தேவையான பொருட்கள்
கத்தரிக்காய் - அரைக் கிலோ
மிளகாய் வற்றல் - 2
பச்சைமிளகாய் - 2
தேங்காய் - அரை மூடி
மல்லிவிதை - ஒரு மேசைக்கரண்டி
பூண்டு - 6 பல்
எள்ளு - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - கால் கிலோ
புளி - ஒரு எலுமிச்சை அளவு
வெல்லம் - ஒரு பாக்கு அளவு
கடுகு - அரைத் தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரைத் தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 150 மி.லி.
கறிவேப்பிலை - சிறிது
நெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


செய்முறை

  1. கத்தரிக்காயை கழுவிச் சுத்தம் செய்து மேல்காம்பினை நீக்கிவிடாமல் நீளவாக்கில் நான்காக கீறிக் கொள்ளவும்.
  2. துண்டுகள் தனித்தனியே வந்துவிடாதவண்ணம் காம்பு பாகத்தை நறுக்கிவிடாமல் விட்டுவிடவும்.
  3. வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காய்களைப் போட்டு பொன்னிறமாக மாறும்வரை வதக்கி தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  4. அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய்யில் மல்லிவிதை, மிளகாய்வற்றல் மற்றும் வெங்காயத்தைப் போட்டு வறுக்கவும்.
    வறுத்தவற்றை தேங்காய் மற்றும் பூண்டுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  5. எள்ளினை தனியாக வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். புளியை ஊறவைத்துக் கரைத்துக் கொள்ளவும்.
  6. வாணலியில் மீதமுள்ள எண்ணெய்யில் புளிக்கரைசலை ஊற்றி அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவினைக் கலந்து வேகவிடவும்.
    பிறகு அதில் கத்தரிக்காய்கள் மற்றும் எள்ளுப்பொடி போட்டு மூடி வைத்து வேகவிடவும்.
  7. குழம்பானது சற்றுக் கெட்டியானதும் வெல்லத்தை அதில் போட்டு வேகவிடவும். குழம்பு நன்கு கெட்டியானதும் இறக்கிவிடவும்.
  8. மற்றொரு வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து குழம்பில் கொட்டி கலக்கி பரிமாறவும்.

Read More...

சிக்கன் மிளகு குழம்பு

கோ‌ழி‌க் க‌றி‌யி‌ல் இ‌ந்த ‌மிளகு‌க் குழ‌ம்புதா‌ன் ‌மிகவு‌ம் அ‌ற்புதமான செ‌ய்முறையாகு‌ம்.

தேவையான பொருட்கள்:
மிளகு : 15
இஞ்சி : 1 துண்டு
மஞ்சள் தூள் : 2 ஸ்பூன்
தணியா தூள் : 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
வெங்காயம் : 1
வெண்ணெய் : 100 கிராம்
உப்பு : தேவையான அளவு
இவற்றுடன் சிக்கன் துண்டுகள் : 5 சிறியவை
எலுமிச்சம் பழச்சாறு

செய்முறை:

மிளகைத் தூள் செய்து மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் இவற்றுடன் கலந்து துவையல் போல் பிசைந்து கொள்ள வேண்டும்.

சிக்கன் துண்டுகளை தண்ணீரில் பத்து நிமிடம் வேக வைக்கவும்.

பிசைந்து வைத்திருக்கும் மசாலா கலவையையும் சேர்த்து நன்றாக கிளறி விடவும். சிக்கனை மிருதுவாக வேகவைத்து இறக்கி வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி, அரிந்த வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாக வதக்கவும்.

இறக்கி வைத்திருக்கும் சிக்கன் குழம்பை வாணலியில் ஊற்றி, உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.

சிக்கன் மிளகு குழம்பு தயார்.

Read More...

முக‌‌த்தை அழகா‌க்கு‌ம் முறை

முதலில் முக‌த்‌தி‌ற்கு மென்மையாக்கும் களிம்பு மற்றும் ஃபவுடன்டேஷன் போ‌ட்டு‌வி‌ட்டு ‌பிறகு உ‌ங்களது செயலை‌த் துவ‌க்கு‌ங்க‌ள்.

முதலில் லிப் லைனரை உதடுகளில் தடவுங்கள், பிறகு லிப்ஸ்டிக். இதனால் 2வது முறை அப்ளை செய்யப்படும் உதட்டுச் சாயம் நீண்ட நேரத்திற்கு இருக்கும். பழைய உதட்டுச் சாயங்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஏனெனில் இதனால் உதடுகள் வெளிறிவிடலாம்.

கருத்த உதடுகளுக்கு இளம்சிவப்பு உதட்டுச்சாயம் பொருத்தமாக இருக்கும். வெ‌ளி‌ரிய உதடுகளை‌க் கொ‌ண்டவ‌ர்க‌ள் அ‌ட‌ர்‌த்‌தியான ‌நிற‌த்தை‌ப் பய‌ன்படு‌த்தலா‌ம்.

மேக்-அப் செய்யும் முன் லோஷன் ஏதாவது பயன்படுத்தவும். முகம் முழுவதும் ச‌ரியான அள‌வி‌ல் ஃபவு‌ண்டேஷ‌ன் போ‌ட்டா‌ல் சரும‌த்‌தி‌ல் இரு‌க்கு‌ம் புள்ளிகள் வெளியே தெரியாது.

கடை‌சியாக ஐ லைனரை போடவு‌ம். ஐ லைன‌ர் ‌விரை‌வி‌ல் காயு‌ம் ‌திற‌ன் கொ‌ண்டதாக‌ப் பா‌ர்‌த்து வா‌ங்கவு‌ம். இ‌ல்லை எ‌ன்றா‌ல் முக‌த்தையே அது கெடு‌த்து‌விடு‌ம்.

Read More...

கூ‌ந்த‌ல் கறுமையாக வளர

உங்கள் கூந்தல் பளபளப்பாகவும், கறுமையாகவும் இருக்க உங்கள் உணவில் எலுமிச்சை சாற்றை சேர்த்துக் கொள்ளவும்.

உங்கள் முடி சுருட்டையானதாக இருந்தால் சீப்பு உபயோகிப்பதை தவிர்க்கவும். சீப்பு உபயோகித்தால் நீங்கள் விரும்பும் வகையில் முடியை அழகுபடு‌த்த முடியாது.

தலை முடியை ஷாம்பு போட்டு கழுவிய பிறகு, ஒரு டீஸ்பூன் வினிகரை ஒரு மக் நீரில் கலக்கி அதைக் கொண்டு தலையை ஒரு முறை கழுவுங்கள், உங்கள் தலை முடி மிருதுவாகவும், பட்டுப் போன்றும், பளபளப்பாகவும் இருக்கும்.

குளிப்பதற்கு முன்பு கூந்தலில் உள்ள சிக்குகளை அகற்றவும்.

அதிக அளவில் ஷாம்பூ உபயோகிப்பதை தவிர்க்கவும். அதிக நுரை வந்தால் தான் முடி சுத்தமாகும் என்று எண்ண வேண்டாம். ஷாம்பூ தடவிய முடியை நன்றாக அலசவும்.

ஒவ்வொரு முறையும் கண்டிஷனர் உபயோகிப்பது மிகவும் அவசியமாகும். கண்டிஷரை முடியின் வேர்களைவிட நு‌னிப் பாகத்தில் தடவுவது நல்லது.

Read More...

அம்பாசமுத்திரம் அம்பானி முன்னோட்டம்





திண்டுக்கல் சாரதி படத்தையடுத்து அம்பாசமுத்திரம் அம்பானி என்ற படத்தில் கருணாஸ் மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். அரசாங்கம் படத்தில் நடித்த நவ்நீத் கவுர் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் அம்பிகா, நிரோஷா, மயில்சாமி, கோட்டா சீனிவாசராவ், மாஸ்டர் சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ராம்நாத்.பி படத்தை இயக்குகிறார்.இந்த படம் குறித்து டைரக்டர் ராம்நாத் கூறுகையில், அம்பாசமுத்திரத்தில் இருக்கும் ஓர் இளைஞன், அம்பானியை முன்மாதிரியாக வைத்து வாழ்க்கையில் முன்னேற துடிக்கிறான். குறுக்கு வழியைத் தேர்ந்தெடுக்காமல் கடுமையாக உழைக்கும் அவன், தன் லட்சியத்தை அடைந்தானா? இல்லையா? என்பதுதான் அம்பாசமுத்திரம் அம்பானி படத்தின் கதை, என்றார். ராஜாதிராஜா படத்தை தொடர்ந்து இந்த படத்துக்கும் கருணாஸ் இசையமைக்கிறார். வைரமுத்து ஐந்து பாடல்கள் எழுதியுள்ளார்.

Read More...

வால்மீகி


கெட்டவனை திருத்தும் ஹீரோயின். தமிழ் சினிமா பலமுறை அடித்து துவைத்து காயப் போட்ட கதை. அறிமுக இயக்குனர் அனந்த நாராயணன் கதையை சொல்ல எடுத்துக் கொண்டிருக்கும் களம் தமிழுக்கு புதுசு.

அழுக்கான மனிதர்கள், குப்பையும் கூளமும் நிறைந்த குறுகலான தெருக்கள், மனிதன் வசிக்கவே முடியாத சே‌ரி குடியிருப்புகள், கைவிடப்பட்ட கல்லறைத் தோட்டம்... தமிழ் சினிமா தனது கேமரா கண்களிலிருந்து மறைக்க விரும்பும் சென்னையின் அசலான முகத்தை அதன் அழுக்கோடும், அழகோடும் அள்ளி வந்திருக்கிறது அழகப்பனின் கேமரா.

பிக்பாக்கெட்டாக வரும் அகில் தனது கேரக்டருக்காக நிறைய உழைத்திருக்கிறார். சென்னை தமிழில் இன்னும் சிரத்தை கூடியிருந்தால் அவரது அழுக்கு கேரக்டருக்கு மேலும் அழகு சேர்ந்திருக்கும்.

மீரா நந்தன் கிண்டர் கார்டன் டீச்சர். பைத்தியத்திடம் சிக்கிக் கொள்ளும்; அவரை அகில் காப்பாற்ற, அகில் மீது பைத்தியமாகிறார் மீரா. அவருக்கொரு கொடுமையான பிளாஷ்பேக்.

அகில் திருந்துவதற்காக இயக்குனர் வைத்திருக்கும் காட்சி, நமது கட்டுப்பட்டை மீறி கண்ணீரை துளிர்க்க வைக்கிறது. பாலியல் தொழிலாளியாக மாறிய பெண், என்னை ம‌ரியாதையா அடக்கம் பண்ணுவியா என கேட்பது பொட்டில் அறையும் வசனம்.

பூக்கா‌ரியாக வரும் தேவிகா அகிலிடம் தனது திருமணத்தின் போது அடுக்கும் நீள வசனத்தை தன்னம்பிக்கை நூலில் சேர்க்கலாம். அவரது ஆடம்பர திருமணம் இயக்குனர் கோட்டைவிட்ட இடங்களில் ஒன்று.

அஜயன் பாலா‌விடம் சே‌ரி பாஷை அருவியாக கொட்டுகிறது. அவரது சகோத‌ரி பாசம் சென்டிமெண்ட் குறையை போக்குகிறது. ஆண்களிடம் மட்டுமே பழகும் பெண் நல்ல கற்பனை.

ஒவ்வொரு திருட்டின் பின்னணியிலும் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பம் இருக்கிறது என்ற கருத்தை வால்மீகியில் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த காட்சிகள் பலவற்றில் நாடகத்தனம்.

என்னடா பாண்டி பாடலை தவிர மற்றவை இளையராஜாவா இசை என்று கேட்க வைக்கின்றன. பின்னணி இசையில் மட்டுமே ராஜா தெ‌ரிகிறார்.

படத்தின் கதைக் களத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்திருப்பது படத்தின் மிகப் பெ‌ரிய பலம். பலவீனம் நிறைய. அகில் ஒரு பிக்பாக்கெட் என்பதை மீரா தெ‌ரிந்து கொள்ள வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட அந்த அணிவகுப்பு, மீராவின் பிளாஷ்பேக், அவரது திடீர் மரணம்...

அ‌ரிதாரம் பூசாத கதாபாத்திரங்களுக்காகவும், வழக்கமான குத்துப் பாடல்களை தவிர்த்ததற்காகவும் வால்மீகியை ஒருமுறை அல்ல பலமுறை பார்க்கலாம்.

Read More...

Sunday, July 5, 2009

Vijay TV Jodi No 1 Season 2 Simbu Fight




Read More...

ROBOT ENDHIRAN LEAKED SHOOTING







Read More...

Simran & Vijay Athiraj Fight - Sun TV

Read More...

உடல் நலக் குறிப்புகள்

இவை எ‌ல்லா‌ம் உ‌ங்களு‌க்கு ஏ‌ற்கனவே தெ‌ரி‌ந்ததுதா‌ன். ஆனாலு‌ம் ஒரு முறை ஞாபக‌ப்படு‌த்‌து‌‌கிறோ‌ம்.

  1. தினமும் குடிக்கும் டீயின் அளவை கட்டுப்பாட்டில் வையுங்கள்.காலையில் அதிகமான நீரை பருகுங்கள். இரவில் குறைவாக அருந்துங்கள்.தினமும் இரண்டு வேலை காபி குடிப்பதை தவிருங்கள்.
  2. இரவு 10 மணிக்கு தூங்கி காலை 6 மணிக்குள் எழுவதே சிறந்தது.
  3. மாலை 5 மணிக்குப் பிறகு அளவுக்கு அதிகமான உணவை உண்ணாதீர்கள்.
  4. மாத்திரைகளை குளிர்ந்த நீருடன் பருக வேண்டாம்.மாத்திரை சாப்பிட்டதும் உடனடியாக படுக்கச் செல்ல வேண்டாம்.சரியான தூங்கும் பழக்கம் இருப்பவர்களை முதுமை அண்டாது.
  5. காலையில் நடை செல்ல முடியாதவர்களுக்கு மாலை 5 மணில் இருந்து 8 மணி வரை நடை செல்வதற்கு சிறந்த நேரமாகும்.
  6. மின்னூட்டம் போட்டிருக்கும் செல்பேசியை பயன்படுத்த வேண்டாம்.பொதுவாக செல்பேசியில் பேசுவதற்கு இடது பக்க காதைப் பயன்படுத்துங்கள்.செல்பேசி காதுக் கருவியை அதிக நேரம் பயன்படுத்த வேண்டாம். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது ஓய்வு கொடுங்கள்.
  7. உட்கார்ந்தே செய்யும் வேலையாக இருந்தாலும் அவ்வப்போது எழுந்து சிறிது நேரம் நடந்து வாருங்கள்.
  8. தொடர்ந்து கணினித் திரையை பார்த்தபடி இருப்பதும் கண்களின் தன்மையை பாதிக்கும். எனவே 20 நிமிடத்திற்கு ஒரு முறை பார்வையை மாற்றுங்கள்.
  9. உண்ணாமல் இருப்பதையும், அதிகமாக உண்ணுவதையும் தவிருங்கள்.

Read More...

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009